தேனி அருகே மனமகிழ் மன்றத்தில் தகராறு கைத்துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், கூடலூர் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கர்ணன் மகன் பிரபு (37). ராணுவ வீரர். பெங்களூருவில் பணிபுரிகிறார்.

தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இந்நிலையில், இவரது நண்பர் மதுசூதனனுக்கு இங்குள்ள மனமகிழ் மன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து கேட்க, பிரபு தனது அனுமதி பெற்ற கைத்துப்பாக்கியுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கோவிந்தசாமி, குமாரவேலு ஆகிய இருவருடன் தகராறு ஏற்பட்டதில் திடீரென மோதல் உருவானது. அப்போது பிரபு தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்தார். அருகே இருந்தவர்கள் ஓடிச்சென்று பிடித்தபோது கை தவறி துப்பாக்கி வெடித்தது.

இதுபற்றி தகவல் அறிந்த கூடலூர் தெற்கு சார்பு ஆய்வாளர் தினகரபாண்டியன் தலைமையிலான போலீஸார், அங்கு சென்று பிரபுவைக் கைது செய்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்