பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில், தேர்வு செய்யப்படும் ஒரு பெண் குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24) மாநில விருதும், பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.
எனவே, வரும் ஜனவரி 2021-ல் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் மாநில விருது வழங்க 18 வயதுக்குட்பட்ட, மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 20-ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (அ) மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் (அ) மாவட்ட திட்ட அலுவலர் (அ) காவல்துறை (அ) தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago