கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80 கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக செய்படுத்தப் பட்டுள்ளது. கால்நடைகளுக்கான பாதுகாப்புத் திட்ட முகாம் நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2020-21-ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80 கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இன்று (11-ம் தேதி) முதல் டிசம்பர் மாதம் 30-ம் தேதி வரை 80 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இம் முகாம்களில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்க மருந்தூட்டல், தடுப்பூசி பணிகள், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை போன்ற பணிகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், கன்றுகள் பேரணி நடத்தி சிறப்பாக பராமரிக்கப்படும் கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம், கால்நடை காப்பீட்டுத் திட்டம், நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டங்கள் ஆகிய திட்டப் பணிகள் குறித்து விளக்க உரைகளும், கால்நடை வளர்ப்போர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அனைத்து கால்நடை வளர்ப்பவர்களும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்