திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் குருப்பெயர்ச்சி விழா குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதியில்லை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகேயுள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வரும் 15-ம் தேதி நடைபெற வுள்ள குருப்பெயர்ச்சி விழாவில் கலந்துகொள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந் தராவ் தெரிவித்தார்.

குருப்பெயர்ச்சி விழா முன்னேற் பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் ம.கோவிந்தராவ் கூறிய தாவது:

தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் (குரு தலம்) குருப்பெயர்ச்சி விழா வரும் 15-ம் தேதி இரவு 9.48 மணி முதல் நடைபெறவுள்ளது.

குருப்பெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் அனை வரும் கரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை கட்டா யம் கடைபிடிக்க வேண்டும். கை, கால்களை கழுவ தண்ணீர் வசதி, கிருமிநாசினி தெளித்தல், வெப்பமானி பரிசோதனை போன் றவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண் டும். கண்டிப்பாக முகக்கவசம் அணி வதுடன், சமூக இடைவெளியை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.

தற்காலிக மருத்துவ முகாமில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவ பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும். மேலும், மருத்துவர் குழுவினருடன் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பக்தர்களுக்கு குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலின் சுற்றுப்புறங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவசரகால வழிகள் உள்ளிட்ட பாதைகளை ஏற்படுத்த வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கோயிலுக்கு வெளிப் பகுதியில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிறுத்தும் விதமாக இடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்களை பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோயில் வளாகம் மற்றும் வெளிப்புறங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும் பக்தர்கள் வந்து செல்ல தஞ்சாவூரிலிருந்து சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், தமிழக அரசு வெளியிட்டுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.அரவிந் தன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், பயிற்சி ஆட்சியர் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அ.பழனி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தென்னரசு, கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்