அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் திருப்பத்தூர் ஆட்சியரிடம் எம்எல்ஏ நல்லதம்பி மனு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நகராட்சியில் அடிப் படை வசதிகளை மேம்படுத்தா விட்டால் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என மக்கள் குறைதீர்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம், எம்எல்ஏ நல்லதம்பி மனு அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் 5 இடங்களில் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, காவல் துறை பாது காப்பு, கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட 127 பொதுநல மனுக் களை ஆட்சியர் பெற்றார்.

திருப்பத்தூர் எம்எல்ஏ நல்ல தம்பி, தனது ஆதரவாளர்களுடன் மக்கள் குறைதீர்வுக்கூட்டத்துக்கு வந்து மனு அளித்தார். அம் மனுவில், திருப்பத்தூர் நகராட் சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் தெரு மின்விளக்கு எரியவில்லை. நகராட்சி எல்லைக்குள் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் கால்வாய் வசதி, மின்விளக்கு, குடிநீர், பொதுசுகாதாரம் போன்றஅடிப்படை வசதிகள் செய்யப் படாததால் மக்கள் அவதிப்படு கின்றனர்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பாதாள சாக்கடை திட்டப்பணி களும் முடிவு பெறாமல் உள்ளன. தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படவில்லை. கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை என்றால் நகராட்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

திருப்பத்தூர் வட்டத்தை தொடர்ந்து, நாட்றாம்பள்ளி, வாணி யம்பாடி, ஆம்பூர் மற்றும் ஆலங் காயம் ஆகிய பகுதிகளில் நடை பெற்ற மக்கள் குறைதீர்வுக்கூட்டத் தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பொது மக்களிடம் இருந்து மொத்தமாக 464 மனுக்களை பெற்றார்.

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வுக்கூட்டத்தில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், சிறு, குறு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் அப்துல்முனீர், வாணியம் பாடி ஆர்டிஓ காயத்ரிசுப்பிரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்