வட கிழக்குப் பருவமழை தொடங்கியும் வறண்டு கிடக்கும் திண்டுக்கல் கோபாலசமுத்திரக் குளம்

By செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியும் திண்டுக்கல் கோபாலசமுத்திரக் குளம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இக்குளத்துக்குள் சமூக விரோதி கள் மது அருந்திவிட்டு காலிப் பாட்டில்களை வீசிச் செல் கின்றனர்.

திண்டுக்கல் நகரில் உள்ள கோபாலசமுத்திரக் குளம் பல லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்புக் குளமாக மாற்றப்பட்டது. சுற்றிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டது. நகரில் சாலைகளில் ஓடும் தண்ணீரை திருப்பி கோபாலசமுத்திரக் குளத் துக்குள்விடத் திட்டமிடப்பட்டது.

நிதி முழுமையாகச் செலவிட்டும் மழைநீர் கோபாலசமுத்திரக் குளத்துக்கு வந்து சேர வழிகாண முடியவில்லை. இதனால், இக் குளத்தைச் சீரமைத்ததன் நோக்கம் நிறைவேறவில்லை. இக்குளத்தில் மழை நீரை முழுமையாகத் தேக்கினால் திண்டுக்கல் நகரின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளைக் கிணறுகளில் நீர் பெருக வாய்ப்புள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் கோபால சமுத்திரக் குளம் தற்போதும் வறண்டு காணப்படுகிறது. மழை நீர் வந்து சேரும் வழிகளும் அடைப்பட்டுள்ளன. மாலையில் குளத்தைச் சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்கள், பயிற்சி முடிந்து அங்கிருந்து சென்றபின், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக கோபாலசமுத்திரக் குளம் மாறிவருகிறது.

மது அருந்துவோர் குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களைக் குளத் துக்குள் வீசிச் செல்வதால் மழைநீர் சேகரிப்புக் குளம், காலி மதுபாட்டில்கள் சேகரிக்கும் குளமாக மாறிவிட்டது. மழைநீரைச் சேகரிக்கத் தொடங்கப்பட்ட சிறப்பான திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாததால் பயனின்றி உள்ளது.

இக்குளத்தைப் பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் காவ லாளியை நியமித்து இரவில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதோடு, மழைநீர் குளத்துக்கு வந்து சேரும் வழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்