திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி உச்சிப்புளி வட்டாரம் இருட்டூரணி கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் பி.ஜி.நாகராஜன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 252.06 காப்பீட்டுத்தொகை செலுத்த வேண்டும். காப்பீடு செய்வதற்கான விண்ணப்ப படிவம், உறுதி மொழி படிவம், ஆதார் அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் மூவிதழ் அடங்கல் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகிய ஆவணங்களைத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம், பொது சேவை மையங்கள் மற்றும் பொதுவுடமை வங்கிகளைத் தொடர்பு கொண்டு காப்பீடு பிரீமியத்தைச் செலுத்தலாம் என்றார்.
இதில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago