445 ஊராட்சிகளில்பராமரிப்பில்லாத மைதானங்கள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன.

ஊராட்சிகளில் இளைஞர் களின் விளையாட்டுத் திறனைத் ஊக்குவிக்க, கடந்த ஆண்டு அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் அனைத்து ஊராட்சிகளிலும் இருபாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

கபடி, வாலிபால், கிரிக்கெட், பூப்பந்து மற்றும் இதர விளை யாட்டுகளில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்குரிய மைதானங்கள் ஏற்படுத்தப் பட்டன. அதன்படி சிவ கங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப் பட்டன. கடந்த ஆண்டு விளை யாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்பட்டபோது சில ஊராட்சிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தாண்டு கரோனாவால் போட்டிகள் நடத்தவில்லை. மேலும் மைதானங்களை ஊராட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால், முட்புதர்கள் மண்டி மைதானங் கள் பாழாகி வருகின்றன.

மைதானங்களை முறையாகப் பராமரிக்க இளைஞர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்