திருவாரூரில் சாக்கடைகளை தூர் வார நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திரக் கூட்டம், மையத்தின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். அருள் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியை திருவாரூர் நகரப் பகுதியில் விரிவுப்படுத்த வேண்டும். குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவர் அமைக்கக் கூடாது. கடைவீதிகளில் வாகனங்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புக் கட்டைகளை பண்டிகைக் காலங்களில் அகற்ற வேண்டும். வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன்பே திருவாரூர் நகர்ப் புறங்களில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டும்.

சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பயிற்சி இயக்குநர் சி.செல்வகுமார், சட்ட இயக்குநர் வி.பூரண விஜய பூபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர், முடிவில், மஞ்சுளா வேலவன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்