தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அரசு மணல் விற்பனை கிடங்கு முன் நவ.19-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
செங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், செங்கிப்பட்டி - புதுப் பட்டி சாலையில் இயங்கும் அரசு மணல் விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் மணல் சேவை பெற பதிவு செய்யவிடாமல், 10 மடங்கு கூடுதல் விலைக்கு மணலை விற்கும் முறைகேட்டை கண்டித்தும், அனைத்து மக்களும் மணல் சேவையைப் பெறுவதற்கு வழிவகை செய்யக் கோரியும், மணல் சேமிப்புக் கிடங்கின் நுழைவாயிலில் ஆக.25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் கோரிக்கைகளை 15 நாட் களில் நிறைவேற்றித் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், 2 மாதங்கள் கடந்தும் கோரிக்கை நிறைவேற்றப் படாததால், செங்கிப்பட்டி அரசு மணல் விற்பனை கிடங்கின் நுழைவாயில் முன் நவ.19-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் வீ.கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் கே.செந்தில்குமார், எம்.துரை ராஜ், டி.கண்ணகி, பூதலூர் ஒன்றியக் குழு உறுப்பினர் சு.லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago