கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.2.50 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தார் சாலைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பையைத் தரம் பிரித்து அப்புறப்படுத்தும் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:
நகராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி ரூ.2.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில், ரூ.1 கோடி மதிப்பில் லட்சுமிபுரத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும், கிருஷ்ணகிரி ஒன்றியம் வெங்கட்டாபுரம் கிராமத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குவிந்துள்ள குப்பையை தரம் பிரித்து அப்புறப்படுத்தும் பணி ரூ.4.05 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 17 மெட்ரிக் டன் குப்பையில் இருந்து 12 மெட்ரிக் டன் உபயோகமற்ற பொருட்கள், 5 மெட்ரிக் டன் மணல் மற்றும் பிளாஸ்டிக் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் கூறினார். ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் சந்திரா, பொறியாளர் கோபு, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago