வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் போச்சம்பள்ளி பகுதியில் பனங்கிழங்கு விலை வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், போச்சம்பள்ளி பகுதியில் பனங்கிழங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, செல்லகுட்டப் பட்டி, மத்தூர், திப்பனூர், களர்பதி, கவுண்டனூர், தாதம்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் பனை மரங்களில் சேகரிக்கப்படும் பனம்பழ கொட்டையின் மூலம், விவசாயிகள் பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடுவது வழக்கம். பனங் கொட்டைகளை 3 அடி ஆழமுள்ள குழியில் புதைக்கின்றனர். 3 மாதங்களில் பனங்கிழங்கு உற்பத்தியாகிறது. இதனை வேக வைத்தும், பச்சையாகவும் சேலம், பெங்களூரூ, சென்னை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். பனங்கிழங்கு கொள்முதல் செய்ய தற்போது கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வராத தால், பனங்கிழங்குகளின் விலை வீழ்ச்சி யடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூறும்போது, நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் பனங்கி ழங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால், போதிய விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு வேக வைத்த 4 பனங்கிழங்குகள் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 6 கிழங்குகள் ரூ.20-க்கு விற்பனை செய்யப் படுகிறது. உள்ளுரில் உள்ள சிறு வியாபாரிகள் கிழங்கு களை கொள்முதல் செய்து கிராமங்க ளிலும், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் விற்பனை செய்து வருகின்றனர்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்