இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு, அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பதற்காக, இத்திட்டத்தை அடுத்தாண்டு ஜூன் 30-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 2020 மார்ச் 24-ம் தேதி முதல் 2020 டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலத்துக்கு, 50 சதவீதம் சம்பளத் தொகை நிவாரணமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற தொழிலாளர் கள், esic.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், பிரமாணப்பத்திரம், ஆதார் அட்டையின் நகல், வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ கிளை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். நிவாரணத்தொகை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு அருகிலுள்ள இஎஸ்ஐ அலுவலகம் அல்லது 1800 11 2526 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை, இஎஸ்ஐ அரசு காப்பீட்டுக்கழக திருநெல்வேலி துணை மண்டல அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago