துரிஞ்சாபுரம் அடுத்த சிறுகிளாம்பாடி கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பால் கொள்முதல் தி.மலை மாவட்ட ஆவின் தலைவர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

கூட்டுறவு மகளிர் பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த சிறுகிளாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

ஆவின் பொது மேலாளர் இளங்கோவன் தலைமை வகித் தார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் நாராயணன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கோவிந்தராஜ், மல்லவாடி நிலவள வங்கி தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுகிளாம் பாடி பால் கூட்டுறவு சங்கத் தலை வர் விஜயலட்சுமி வரவேற்றார்.

கூட்டுறவு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை திறந்து வைத்து பால் கொள்முதல் பணியை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “கரோனா தொற்று காலத்தில் தனியார் நிறுவனங்களால் பால் கொள்முதல் செய்ய முடியாமல் இருந்த நிலையிலும், ஆவின் மூலம் தடையில்லாமல் தொடர்ந்து பால் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படாமல் இருந்தது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் நன்மை பெறுவார்கள். ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் சங்கங்களில் பாலை ஊற்றி, தங்களது வாழ்வாதாரத்தை பெண்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதில், ஆவின் மேலாளர் காளியப்பன், விரிவாக்க அலுவலர் கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்