மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

By செய்திப்பிரிவு

வாழும் கலை சார்பில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கி வரும் வாழும் கலை அமைப்பின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் நாகநதி புனரமைப்பு திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறு அமைக்கும் திட் டத்தை செயல்படுத்தி உள்ளனர். தற்போது, திருப் பத்தூர் மாவட்டத்திலும் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாழும் கலை சார்பில் தமிழகத்தில் உள்ள ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வன அலுவலர்கள் ஆகியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இதற்காக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோரை நாகநதி புனரமைப்பு திட்டத்தின் தலைவர் சந்திர சேகரன் குப்பன், துணைத் தலைவர் சுந்தர வடிவேலு, ஆசிரியர்கள் கோபி, சசிகலா ஆகியோர் நேற்று சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்