ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 148 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 434-ஆக அதிகரித்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 852-ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 847- ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 17,920-ஆக உயர்ந்துள்ளது. 17,327 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, சிகிச்சை பலனின்றி 265 பேர் உயிரிழந்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago