விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.150.92 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் வழங்கினர்

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக நேற்று நடைபெற்ற விழாவில் 25,456 பயனாளிகளுக்கு ரூ.150.92 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

மேலும், ரூ.57 லட்சம் மதிப்பி லான 3 புதிய கிடங்குகளுக்கான கல்வெட்டுகளை திறந்து வைத் தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது:

மாநில அளவில் கூட்டுறவுத் துறையின் மூலம் 2011 முதல் கடந்த 22.10.2020 வரை 1,01,75,629 விவசாயிகளுக்கு ரூ.56,541.04 கோடியும், நடப்பாண்டில் 22.10.2020 வரை 6,17,241 விவசாயிகளுக்கு ரூ.4,762 கோடியும் வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மண்டலத்தில் நடப்பாண்டில் 31.10.2020 வரை 54,432 விவசாயிகளுக்கு ரூ.389 கோடி வட்டியில்லா கடன் வழங்கப் பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் ரூ. 59,453 கோடி இருப்பு

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில், கடந்த செப்டம்பர் மாத கணக்கின்படி ரூ.59, 453 கோடி இருப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 2011 முதல் 30.09.2020 வரை அனைத்து வகைக் கடன்களாக 7,82,14,577 நபர்களுக்கு ரூ.3,96, 614 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 5,17,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4,044 கிடங்குகள் ரூ.533.78 கோடி மதிப்பில் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

கூட்டுறவுத் துறையின் மூலம் 2011-2012 முதல் 30.09.2020 வரை 4,17,073 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,517 கோடி கடன் மாநிலம் முழுவதும் வழங்கப் பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மண்டலத்தில் 7,148 குழுவின் உறுப்பினர்களுக்கு ரூ.74 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து விழுப்புரம் ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன், ஆட்சியர் அண்ணாதுரை. சட்டமன்ற உறுப் பினர்கள்குமரகுரு, சக்ரபாணி, பிரபு, முத்தமிழ்ச் செல்வன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், சிறப்புப்பணி அலுவலர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி, துணைப்பதிவாளர், முதன்மை வருவாய் அலுவலர் சகுந்தலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்