சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு இன்றி மின் மாற்றிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.
காளையார்கோவில் துணை மின்நிலையம் மூலம் காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், புலியடித்தம்பம், ராணியூர் உள்ளிட்ட பகுதிகள் மின் விநியோகம் பெறுகின்றன. இந்தத் துணை மின்நிலையம் முறையாகப் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதனால், மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து, பலத்த காற்று வீசினால் விழும் நிலையில் உள்ளன. அங்கு பணிபுரியும் மின் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். பல ஆண்டுகளாக மாற்றப்படாத தளவாடப் பொருட்களால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இவற்றை மாற்ற வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மின் ஊழியர்கள் சிலர் கூறுகையில், பராமரிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாகச் செலவழிப்பதில்லை.
பழுதடைந்த மின்தளவாடப் பொருட்களையும் மாற்றுவதில்லை. மின்மாற்றிகள் அமைந்துள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து பல மாதங்களாகியும் மாற்றவில்லை என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago