தஞ்சாவூரில் 40 ஆண்டுகளாக வீடாக பயன்படுத்தப்பட்டு வந்த பழமையான கோயில் மண்டபம் மீட்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் தொப்புள் பிள்ளையார் கோயில் அருகே சேதமடைந்த நிலையில், பழமையான கோயில் ராஜகோபுர மண்டபம் உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களில் பணியாற்றிய சபாபதிபிள்ளை என்பவர், இக்கோயில் மண்ட பத்தில் வாடகைக்கு குடியிருந்தார். அதன்பிறகு, அவரது மகன் ஜெயராமன், மருமகள் சாமிளா ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கோயில் இடத்தை ஆக்கிரமித்து குடியி ருப்பதாகவும், அதற்கு மின் சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்த நிலையில், கடந்த 31.1.2019 அன்று ஜெயராமனின் வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலரான மாதவன் உத்தரவிட்டார்.

இதற்கு ஜெயராமன் மறுப்பு தெரிவித்ததால், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில், கோயில் இடத்தை மீட்க உத்தரவு பிறப்பிக் கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த மார்ச் 18-ம் தேதி ஜெயராமன் இறந்த நிலையில், அவரது மனைவி சாமிளா மட்டும் அங்கு வசித்து வந்தார். கடந்த அக்.20-ம் தேதி நீதிமன்ற உத்தரவு நகலை, சாமிளாவிடம் அறநிலையத் துறை யினர் வழங்கினர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் 430.54 சதுர அடி கோயில் மண்டபத்தை மீட்ட அறநிலையத் துறையினர், அங்கிருந்து சாமிளாவை வெளியேற்றி, வீட் டின் கதவு உள்ளிட்டவற்றை அகற்றி, அறிவிப்பு பலகை வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்