சிறை அதிகாரிகள் சூழ்நிலைக்கு ஏற்ப பணியாற்றுவதுடன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் தெரிவித்தார்.
வேலூர் தொரப்பாடியில் சிறை நிர்வாக சீர்திருத்த பயிற்சி மையம் (ஆப்கா) இயங்கி வருகிறது. இங்கு,25-வது பிரிவாக 68 உதவி ஜெயிலர் கள், துணை ஜெயிலர்கள், ஜெயி லர்கள், உதவி கண்காணிப்பாளர் கள், துணை கண்காணிப்பாளர் களுக்கான 9 மாதங்கள் பயிற்சிநிறைவு விழா நேற்று நடை பெற்றது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நா டகா, கேரளா, டெல்லி, நாகா லாந்து, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 9 மாதங்கள் பயிற்சி பெற்றனர்.
தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை கவாத்து பயிற்சி நிறைவு விழாவுக்கு ஆப்கா பயிற்சி மைய இயக்குநர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இதில், தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்தவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் பேசும்போது, ‘‘இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சிறை அலுவலர்கள் ஆப்காவில் பயிற்சி பெற்றுள்ளனர். சிறை அதிகாரிகள் தைரியத்துடன் சிறைத்துறை பணிகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
சிறை அதிகாரிகள் சூழ் நிலைக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும், இது வேண்டாம் என்பதையும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். மற்றவர் கள் கூறுவதை அமைதியாக கேட்க வேண்டும். உங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சிறை கைதிகளின் மறுவாழ்வு பணிகளை தைரியமாக மேற்கொள்ள வேண்டும்.
சிறைத்துறை பணியானது ரோஜாப்பூ படுக்கையாகவும் இருக் கலாம் அல்லது முள் படுக்கையாக வும் இருக்கலாம்.
எனவே, ஒவ்வொரு நிமிடமும் மனிதநேயத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago