மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப் படும் நீரின் அளவு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப் பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று முன்தினம் வரை டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 900 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 6 மணி முதல் டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
நீர்வரத்து விநாடிக்கு 5,220 கனஅடியாக இருந்தது. நேற்று முன்தினம் 97.28 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 96.37 அடியானது. நீர் இருப்பு 60.23 டிஎம்சி-யாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago