உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தீபாவளியன்று காலை 6 மணி யிலிருந்து 7 மணி வரையிலும், இரவு நேரத்தில் 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி யில் அமைச்சர் கருப்பணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியோடு உள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளிப் பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு நேரத்தில் 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சீனப்பட்டாசுகள் விற்பனையைத் தடை செய்வது குறித்து முதல்வர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்.பொதுமக்கள் அனைவரும் மாசில்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.

திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஆனால், முதல்வர் பழனிசாமி பொறுமையாகச் செயல்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார், என்றார்.

மாசுகட்டுப்பாடு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனை குறித்து கேட்டபோது, ‘லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களது கடமையைச் செய்து நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்