நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட குயின்ட் தனியார் தோட்டத்தில் வசித்தவர் பாலுச்சாமி. இவர் கூடலூர் நகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் கூடலூர்வந்து பணி முடித்து, மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப்பேருந்து, சாலை பழுதால் நிறுத்தப்பட்டது. நடந்து சென்றபாலுச்சாமியை காட்டு யானை மிதித்துக் கொன்றது. கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை வனத்துறையினர் அனுப்பிவைத்தனர். கடந்த இரண்டு நாட்களுக்குமுன்பு, இதே யானை பெண் ஒருவரை மிதித்துக் கொன்றதாகவும், நிரந்தரமாக வனப்பகுதிக்குள் யானையை விரட்டுவதுடன், சாலையை சீரமைத்து பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago