7 பேர் விடுதலை விவகாரத்தில் 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது ஏன்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

By செய்திப்பிரிவு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதி மன்ற நீதிபதிகள், இந்த நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது என அதி ருப்தியும் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண் டனை கைதியாக 28 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை தொடர் பாக தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், இதுதொடர்பாக தமிழக ஆளு நரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், அஜய் ரஸ்டோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தனது வாதத்தில், ‘‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் இந்த வழக்கில் எந்த முடிவும் இல்லை. எனவேதான் மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், ‘‘விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும்.

அவர் உத்தரவிட வேண்டும் என விரும்புகிறோம். இந்த நீதி மன்றத்துக்கு என உள்ள பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்த விரும்பவில்லை.

அதேநேரம் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு நட வடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஆளுநர் எதற்காக காலம் தாழ்த்துகிறார். ஆளுநருக்கு தமிழக அரசு தரப்பு இதுதொடர்பாக எடுத்துரைத்து இருக்கலாமே’’ என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ‘‘எந்த சட்டம் மற் றும் எந்த வழக்கு தீர்ப்பின் அடிப் படையில் இந்த விவகாரத்தில் நாங்கள் முடிவெடுக்க முடியும் என்பதையும் மனுதாரர் தரப்பு ஆராய்ந்து கூறுங்கள்’’ எனவும் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி நிவாசன், ‘‘ஆளுநருக்கு சிபிஐ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என் பதால்தான் அவர் முடிவு எடுக்கா மல் உள்ளதாக தெரிகிறது’’ என தெரிவித்தார். அதற்கு பேரறி வாளன் தரப்பு வழக்கறிஞர், ‘‘ஏற்கெனவே நிலோபர் நிஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது பிரத்யேக அதிகாரம் 142-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களை விடுவித்து உத்தரவிட்டது. எனவே, அந்த சட்டப்பிரிவை இந்த வழக்கி லும் பயன்படுத்தலாம்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் நவ.23-ம் தேதிக்கு தள்ளி வைத் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்