புதுச்சேரியில் நேற்று புதிதாக 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 91.39 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் நேற்று கூறியதாவது:
புதுச்சேரியில் 4,004 பேருக்கு கரோனா பரிசோதனை செய் யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 92, காரைக்காலில் 13, ஏனாமில் 7, மாஹேவில் 37 என மொத்தம் 149 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.69 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 35,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வீடுகளில் 1, 817 பேரும், மருத்துவமனைகளில் 628 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உட்பட 2,445 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
நேற்று ஒரே நாளில் 457 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,284 (91.39 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 17 ஆயிரத்து 809 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 253 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா
கடலூர் மாவட்டத்தில் நேற்று48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிப்பு 23,340- ஆக உயர்ந்துள்ளது. 22,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 173 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் இறந்தார். இதுவரை 272 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago