பழநியில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
பழநியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களே கைவிட்டுச்செல்கின்றனர். இவர்கள் மலைக்கோயில் அடிவாரம், பேருந்து நிலையம், பழநி நகர் பகுதியில் திரிந்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க வேண்டும் எனப்பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மனநல மருத்துவத் துறை ஆகியவை இணைந்து பழநியில் மனநலம் பாதிக்கப்பட்டு திரிபவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தது. இதையடுத்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் புவனா தலைமையில் மனநல மருத்துவர்கள் பீன்வெசலி, காந்தி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு அவர்களை மீட்டனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்கள் அய்யலூர், ரெட்டியபட்டியில் உள்ள மனநலக் காப்பகங்களில் சேர்க்கப்பட உள் ளனர். அதிக பாதிப்பு இருந்தால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர் எனத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago