டி.கல்லுப்பட்டி அருகே ஏழூர் முத்தாலம்மன் கோயில் திருவிழா நாளை நடக்கவுள்ளதால் ஏராள மான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
காப்புக்கட்டுதலுடன் தொடக்கம்
டி.கல்லுப்பட்டியைச் சுற்றி யுள்ள கிராமங்களில் நடக்கும் ஏழூர் அம்மன் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக் கும். இவ்விழா கடந்த புதன்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
சப்பரம் வடிவமைப்பு
டி.கல்லுப்பட்டி அருகே அம்மாப்பட்டியில் அம்மன் இருப்பதால் அந்த ஊர் தவிர கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டி ஆகிய 6 கிராமங்களில் சப்பரங்கள் வடிவமைக்கும் பணி நடந்தது. அம்மாப்பட்டியில் செய்யப்படும் 7 அம்மன் சிலைகளுக்கு இன்றிரவு கண் திறப்பு மற்றும் சிறப்புப் பூஜைகள் நடக்கும். இந்தச் சிலைகளை தங்கள் ஊர்களுக்கு எடுத்துச்செல்ல 6 கிராமத்தினரும் ஊர்களில் இருந்து சப்பரங்களுடன் அம்மாப்பட்டிக்கு நாளை காலை வருவர். தங்கள் கிராம முத்தாலம்மன் சிலையை எடுத்துக்கொண்டு சப்பரத்துடன் ஊர்வலமாக மீண்டும் அவரவர் கிராமங்களுக்குத் திரும்புவர். டி.கல்லுப்பட்டிக்கு வரும் அனைத்துச் சப்பரங்கள் மற்றும் அம்மன்களையும் தரி சிக்க ஏராளமான பக்தர்கள் திரள்வர். பின்னர் அங்கிருந்து கிராமங்களுக்குத் தனித்தனியே சப்பரங்கள் பிரிந்து செல்லும்.விழாவுக்காக போலீஸ் பாது காப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நாளை கல்லுப்பட்டி பகுதியில் நிலைமைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்யப் பட உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago