நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:
நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆயிரம் சிலிண்டர்களுக்கு சமம். புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலிண்டரில் உள்ள திரவம் ஒரு லிட்டருக்கு 800 கிலோ ஆக்ஸிஜனைத் தரும். வாரத்திற்கு ஒரு முறை இந்த சிலிண்டரில் திரவம் நிரப்பினால் போதும். இம்மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆக்ஸிஜன் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாள்தோறும் 100 சிலிண்டர் தேவைப்படும்.
இதற்காக ஈரோட்டில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் தற்போது திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவப்பட்டிருப்பது போக்குவரத்து சிரமங்களை தவிர்க்கும். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் இதுவரை 1.94 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 4,350 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago