சீனப்பட்டாசு வரவைத் தடுக்க சென்னையில் 8-ம் தேதி ஆலோசனை விக்கிரமராஜா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சீனப்பட்டாசுகள் வரவைத் தடுக்கும் வகையில், அனைத்து வியாபாரிகள் சார்பில் சென்னையில் வரும் 8-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூரில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது;

பண்டிகைக் காலங்களில் கடைகளில் கரோனா ஆய்வு என்ற பெயரில் அபராதம் விதிப்பதற்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தால் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு உள்ளது. இதனால், இவற்றின் விலை உயர வாய்ப்பு உண்டு.

வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராடும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்களை ஒன்று திரட்டி, டெல்லியில் மாநாடு நடத்தப்படும். சீனப்பட்டாசு வரவைத் தடுக்கும் வகையில் சென்னையில் அனைத்து வியாபாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் 8-ம் தேதி நடக்கிறது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்