திருவாரூர் மாவட்டத்தில் 135 பேருக்கு கரோனா சிகிச்சை

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் 135 பேருக்கு கரோனா தொற்று சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் குறித்து ஆட்சியர் வே.சாந்தா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது:

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 9,730 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதால், 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் தற்போது 135 பேர் கரோனா தொற்றுக் கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 11 நபர்கள் மட்டுமே தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றார்.

முன்னதாக, திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளுக்கும் ஆட்சியர் சென்று சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, கரோனா தொற்று மற்றும் இதர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் முத்துக்குமரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்