தலைமை ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் பணி வரன்முறை ஆணை வழங்கல் பள்ளிக் கல்வித் துறை தகவல்

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களை பணிவரன்முறை செய்து ஆணைவழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் தலைமை ஆசிரியராக 1,145 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ள நாள் முதல் பணி வரன்முறை செய்து ஆணை வழங்கப்படுகிறது. இதையடுத்து அந்தந்த தலைமை ஆசிரியர் பணிப் பதிவேட்டில் பணி வரன் முறை விவரங்களை முறையாக மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும். மேலும், முன்னுரிமை பட்டியலில் எவர் பெயரேனும் விடுபட்டிருப்பின் அதன் விவரங்களை உடனே இந்த இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE