மதுரை அருகே ஒரே நாளில் கண்மாயில் ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

மதுரை அருகே புதுதாமரைப்பட்டி சோளம் பதி கண்மாயில் ஒரே நாளில் ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

புதுதாமரைப்பட்டி ஊராட்சி மற்றும் தாமரை தன்னார்வலர்கள் இயக்கம் சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய் களில் பனை விதைகள் நடும் பணி நடந்து வருகிறது. சம்பை ஊருணி, கல்லூரணி கரைகளில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.

சோளம்பதி கண்மாய் கரையில் நடந்த பனை விதை நடும் பணிக்கு புது தாமரைப்பட்டி ஊராட்சித் தலை வர் கே.எஸ்.எம். ஆனந்தகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மலை செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தாமரை தன்னார்வலர்கள் இயக்க ஒருங் கிணைப்பாளர் வி.செல்வம் வரவேற்றார்.

மதுரை கிழக்கு ஒன்றிய கிராமத் தலைவர் அ.பா.ரகுபதி பனை விதை நடவைத் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியக் கவுன்சிலர்கள் எம்.முத்துராமலிங்கம், ஏ.போஸ், ஒன்றியப் பொறுப்புக் குழுத் தலைவர் மதியழகன், மற்றும் தாமரை தன்னார்வலர்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

நூறு நாள் வேலைத் திட்டப் பணி யாளர்களைக் கொண்டு கண்மாய் முழுவதும் ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE