மொடக்குறிச்சியில் 9-ம் தேதி ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை மாநாடு

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கை மாநாடு மொடக்குறிச்சியில் 9-ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏ.எம்.முனுசாமி, கி.வே.பொன்னையன், வழக்கறிஞர் ஈசன், ஆர்.குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேளாண் விளைநிலங்களை சேதப்படுத்தி, உழவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஐடிபிஎல் திட்டத்தை, சாலையோரமாக கொண்டு செல்ல தேர்தல் அறிக்கையில் கொள்கை முடிவை அரசியல் கட்சிகள் முன் வைக்க வேண்டும் என்பது உழவர் குடும்பங்களின் பெரும் எதிர்பார்ப்பாகும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி காலை 9 மணி முதல், பகல் 2 மணி வரை மொடக்குறிச்சியில் கோரிக்கை மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டத்திலும் மாநாட்டு பிரச்சார பணிகள் தொடங்கியுள்ளது, எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE