சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் கரூரில் இருந்து ஒடிசாவுக்கு சரக்கு ரயில் மூலம் 532 டன் கொசு வலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டத்தின் வருவாயை பெருக்கும் வகையில் வணிகப் பிரிவு சார்பில் சிறப்பு வர்த்தக மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு சரக்கு ரயில்கள் மூலமாக நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் அண்மையில் தெலங்கானா, கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கடந்த 26-ம் தேதி கரூரில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகேயுள்ள மான்செஸ்வர் பகுதிக்கு 42 ரயில் பெட்டிகளில் கொசுவலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ.47.80 லட்சம் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில், நேற்று கரூரில் இருந்து 24 சரக்குப் பெட்டிகளில் 532 டன் கொசு வலைகள் ஒடிசா மாநிலம் குர்தா ரோடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.21.09 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago