நாமக்கல்: நாமகிரிப்பேட்டை ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 6 ஊராட்சிகளில் உள்ள 13 கிராமங்களுக்கு உட்பட்ட 1,691 வீடுகளுக்கு ரூ.2.82 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் ரூ.13.87 லட்சம் மதிப்பில் 61 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் குழாய் இணைப்பு பொதுமக்களின் வீடுகளில் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா, குடிநீர் குழாய்கள் பாதுகாப்பாக தரைக்கடியில் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைந்தும், தரமானதாகவும் மேற்கொள்ளும்படி ஆட்சியர் அறிவுறுத்தினார். நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago