கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் புத்தக கண்காட்சி அக்.30-ம் தேதி தொடங்கியது. வரும்10-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 5,000 தலைப்புகளில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

புத்தக கண்காட்சியில் வாசிப்பு இயக்கம் சார்பில் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது. நாடார் நடுநிலைப் பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

நேற்று (நவ.1-ம் தேதி) பிறந்த நாள் கொண்டாடிய 12-ம் வகுப்பு மாணவி கலாதேவிக்கு இந்து தமிழ் திசை வெளியீடான ‘ஆங்கிலம் அறிவோமே’ புத்தகம், 1-ம் வகுப்பு மாணவர் வனத்துரைராஜ், 2-ம் வகுப்பு மாணவி அபிதா ஆகியோருக்கு ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’ புத்தகத்தை ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் ரவி மாணிக்கம் பரிசாக வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்