அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் விவசாயிகளுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் அழைப்பு

By செய்திப்பிரிவு

விவசாயத்தில் லாபமடைய அர சின் ஆராய்ச்சி நிறுவனங்களை விவசாயிகள் முழுவதும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் எனஅமைச்சர் கமலக்கண்ணன் தெரி வித்தார்.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வில்லியனூரில் விவசாயி களுடனான கலந்தாய்வு கூட்டம்நேற்று நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக கலந்துகொண்டனர்.

இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா குறித்து ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரியின் பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். இந்த சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு மத்திய அரசின் வேளாண் நிறுவனங்கள், வேளாண் உற்பத்தி சார்ந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறந்த விருதுபெற்ற விவசாயிகளை சந்தித்து சேகரித்த விவரங்களை தொகுத்து தரப்பட்டுள்ள 'வேளாண் ஆற்றுப்படை' என்ற கையேட்டை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டார்.

அதனை வேளாண்துறை பேராசிரியர்கள் மற்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த விருதுபெற்ற விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் பேசும்போது, ‘‘விவசா யத்தில் லாபமடைய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களை விவசாயிகள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம்விவசாயத்தின் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்து அதனை பின்பற்றி விவசாயத்தை லபகரமான தாக மாற்ற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்