கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு அருகே கரைமேடு கிராமத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின்படி உற்பத்தியாளர் குழுக்களுக்கு கரோனோ கால நீண்ட கால கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராசாத்தி தலைமை வகித்தார். செயல் அலுவலர் பஞ்சநாதன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சிவக்குமரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர்கள் ரமேஷ், சதீஷ், முத்துக்குமார், இளம் வல்லுநர் கதிரவன் ஆகியோரும் கலந்து கொண் டனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி யில் அதிகாரிகள் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதியை கையாள்வது குறித்து விளக்கிக் கூறினர்.
இதில் மொத்தம் 16 குழுக் கள் கலந்து கொண்டன. ஒருகுழுவுக்கு தலா ரூ. 1.5 லட்சம் வீதம் 16 குழுக்களுக்கு கடன் நிதி வழங்கப்பட்டது. வட்டார அணித்தலைவர் கரிகாலன் நன்றி கூறி னார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago