தமிழ்நாடு மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்க மத்தியசெயற்குழுக்க்கூட்டம் விழுப்புரத் தில் நேற்று நடைபெற்றது. மாநிலத்தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் சுந்தரராஜன், மாநில சட்டஆலோசகர் குமரன், மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
கரோனா தொற்றால் உயிரிழந்த முன் களப்பணியாளர்களுக்கு ரூ 50. லட்சம் வழங்க வேண்டும். கரோனா தொற்று ஏற்பட்ட பணியாளர்களுக்கு ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்க வேண்டும். மக்கள் தொகை அடிப் படையில் வருவாய் கிராமம், குறுவட்டம், மண்டலம், வட்டம், மாவட்டம் ஆகியவற்றை ஏற்படுத்துகிற அலகை மறு நிர்ணயம் செய்ய வேண்டும். துணை ஆட்சியர் நிலையில் பேரிடர் மேலாண்மை, சட்டப்பணிகள்,தேர்தல் ஆகிய பணியிடங்கள் உருவாக்கி உட னடியாக நிரப்பிட வேண்டும். ‘அவுட்ஸோர்ஸிங்’ நியமன முறையை நீக்கி சிறப்புத்தேர்வு நடத்தி, தற்போது பணியாற்றும் கணினி பணியாளர்களை நிரந் தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago