கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

By செய்திப்பிரிவு

தேசிய ஒற்றுமைக்காகவும், பாது காப்பிற்காகவும் உழைத்த சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான அக்டோர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மாநில அரசின் சார்பில் தேசிய ஒற்றுமை தின விழா நேற்று நடைபெற்றது. புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான்,வைத்திலிங்கம் எம்பி, அரசு கொறடா அனந்தராமன், எம்எல்ஏக்கள், டிஜிபி பாலாஜி வத்ஸவா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து காவல்துறையி னரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வாசிக்க, நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று அலுவ லர்கள் தேசிய ஒற்றுமை உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் உறுதிமொழி எடுத் துக்கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, கூடுதல் ஆட்சி யர் ராஜகோபால் சுங்கரா மற் றும் அனைத்துத்துறை அலுவ லர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அபிநவ் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள்உறுதிமொழி எடுத்துக் கொள்ளப் பட்டது.

விழுப்புரம்

இதேபோல், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் அண்ணாதுரை தலை மையில் அனைத்துத்துறை அரசுஅலுவலர்களும் தேசிய ஓற்றுமைநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ லட்சுமி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதே போல மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஓற்றுமை நாள் உறுதிமொழியை ஐ.ஜி (பொறுப்பு) சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் எஸ் பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்