புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாள் மற்றும் இந்திராகாந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் சத், புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்ல பபாய் பட்டேல், இந்திராகாந்தி உருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
புதுச்சேரியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களை பற்றி சிந்திக்காமல், மக்கள் நலத் திட் டங்களை தடுத்து நிறுத்துக்கிற கூட்டத்தை சாடாமல், ஆட்சியில் குறையிருந்தால் அதனை சுட்டிக் காட்டாத எதிர்க்கட்சி புதுச்சேரியில் உள்ளது. எதிர்க்கட்சி எதிரிக்கட்சி வேலையை பார்க்கிறது. கிரண் பேடிதான் நமக்கு எதிர்க்கட்சி.
புதுச்சேரியில் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள் ளோம். மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்த பிறகு புதுச்சேரி மாநிலத் தைப் பற்றிச் சிந்திப்பதே கிடை யாது. மாநில வளர்ச்சி பற்றி அவர் களுக்கு கவலையும் கிடையாது. ஒருபுறம் மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. மற்றொருபுறம் வருகின்ற திட்டங்களை தடுப்ப தற்காக கிரண்பேடி இருந்து கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
புதுச்சேரியில் காவலர்க ளுக்கான தேர்வு நவம்பர் 4-ம் தேதிநடக்க இருக்கிறது. இதற்காக ஐதரா பாத்தைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது கரோனா காரணமாக அவர்களால் வர முடியவில்லை. இதனால் நம்முடைய காவல் துறையினரே தேர்வு செய்வதற்கான உத்தரவை கிரண்பேடியிடம் அனுப்பினோம். ஆனால் அவர்,ஐதராபாத் நிறுவனத்தை அழைக் கச் சொல்லி நம்முடைய உத்தர வைத் தடை செய்கிறார். குறிப்பாக வயது வரம்பை 22 லிருந்து 24 ஆக உயர்த்தியதற்காக பல கோணங்களில் அவர் இந்த காவலர் தேர்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்கிறார்.
நாம் ஒரு போராட்டத்துக்கு நடுவே ஆட்சி செய்து கொண்டி ருக்கிறோம். அரசு கொண்டு வரும் அனைத்து திட்டத்துக்கும் தடை விதிப்பதால் எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. தினமும் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எங்களின் கையை கட்டிப் போடாமல் இருந்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்திருப்போம்.
என் மேல் கொண்ட பாசத் தால் கிரண்பேடி இதுவரை சிபிஐயிடம் 10 ஊழல் புகார்களை அனுப்பியுள்ளார். 4 வேட்டியும், 4 சட்டை யும் எடுத்துக்கொண்டு போகத் தயாராக இருக்கிறேன்.
2021-ல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்ற சூளு ரையை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரி வித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான்,கமலக்கண்ணன், எம்பி வைத்தி லிங்கம் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago