சிதம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயணிகளுக்கு குடிநீர் வைக்க வில்லை. நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் நிலையத்தில் குடிநீர் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ரயில் நிலைய அதிகாரி யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பயணிகளுக்கு குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மேலும், கரோனா காலத்தில் ரயில் நிலையம் அடைக்கப்பட்டிருந்த நிலை யில் கடந்த இரு மாதங்களாகவே இயல்பு நிலை திரும்பியுள்ளது. சிதம்பரம் ரயில் நிலையத்தை பொறுத்தவரையில் மயிலாடு துறை பயணிகள் ரயில், திருச் செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் முக்கியமானது. இந்தரயில்கள் இதுவரையில் இயக்கப் படவில்லை. ஆனாலும், சோழன்எக்ஸ்பிரஸ் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. அந்தபயணிகள் கடந்த இரு மாதங்க ளாக குடிநீர் வைக்கவில்லை என்று தொடர்ச்சியாக முறை யிட்டு வந்தனர். இந்நிலையில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ரயில் நிலைய அதிகாரி யிடம் மனு அளித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago