மதுக்கூடமாக மாறிய பேருந்து நிறுத்தம் தேவகோட்டை அருகே கிராம மக்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

தேவகோட்டை அருகே பஸ் நிறுத்தங்களை மதுபானக் கூடங் களைப் போல் சமூக விரோதிகள் பயன்படுத்தி வருவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

காரைக்குடியில் இருந்து தேவிப்பட்டினம் வரை 80 கி.மீ. தூரத்துக்கு ரூ.355.90 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இச்சாலையில் தேவகோட்டை அருகே உள்ள உடப்பன்பட்டி, முள்ளிகுண்டு பஸ் நிறுத்தங்கள் இரவு நேரத்தில் மட்டுமல்லாது பகலிலும் மதுபான பார் போல செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்துவோர் பஸ் பயணிகளிடம் பிரச்சினை செய்கின்றனர். மேலும் குடித்துவிட்டு மது பாட்டில் களை பேருந்து நிறுத்தம், சாலையில் எறிந்து உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்துக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். அதேபோல் இருசக்கர வாகனங்களில் செல்வோரிடமும் தகராறு செய்வதால் அச்சாலையை பயன்படுத்தவே பொதுமக்கள் தயங்குகின்றனர். இப்பேருந்து நிறுத்தங் களில் மது குடிப்போர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்