சிவகங்கை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சாந்தி கூறியதாவது: விதைப் பண்ணை அமைக்க உளுந்து பயிரில் வம்பன் 6, வம்பன் 9, வம்பன் 10 ஆகிய ரகங்களை பயன்படுத்தலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது. வயது 65 முதல் 70 நாட்கள். விதைக்கும்போது தலா ஒரு பாக்கெட் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவை, 200 கிராம் ஆறிய வடிகஞ்சி யுடன் கலந்து, அதில் 8 கிலோ விதையைக் கொட்டி நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.
விதைப் பண்ணை அமைக்க விரும்புவோர் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago