மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செய்வதில் பாரபட்சம் முதல்வர் நாராயணசாமி மீது அதிமுக விமர்சனம்

மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செய்வதில் கூட பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் நாராயணசாமி மீது அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள கூட்ட அரங்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பு கமிட்டியின் கூட்டம் நேற்று முன்தினம் இரவு முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிலை அமையும் இடம், சிலை வடிவமைப்பு உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் அவருக்கு சிலை அமைக்க வேண்டுமென அதிமுக சார்பில் கோரிக்கை வைத்தோம்.

அப்போது பொது இடங்களில் எங்கும் சிலை வைக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது என முதல்வர் நாராய ணசாமி பதில் அளித்திருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார். கருணாநிதி மறைவுக்கு முன் மரணமடைந்த ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் எதுவும் செய்யாமல் இருப்பது சரியானதல்ல.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் நாராயணசாமியின் செயல் அரசியல் காழ்ப் புணர்ச்சியுடன் இருப்பது கண்டிக் கத்தக்கது.

திமுகவினரை சமாதானப் படுத்த இந்த அறிவிப்பை முதல்வர் செய்துள்ளதாக தெரிகிறது.

எங்களை பொறுத்தவரை திமுக தலைவருக்கு அரசு சார்பில் பெருமை சேர்க்க எது செய்தாலும் சம்மதமே. ஆனால் மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செய்வதில் கூட பாரபட்சம் காட்டும் முதல்வர் நாராயணசாமியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது முதல்வர் பதவிக்கு இழுக்கான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் எங்கும் சிலை வைக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது என முதல்வர் நாராயணசாமி பதில் அளித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE