விழுப்புரத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

தமிழ்நாடு மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் (அக்.31) விழுப்புரத்தில் நாளைநடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த முன் களப்பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ரூ. 2 லட்சம் கருணைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்டவை விவாத பொருளாக எடுத்துக்கொள் ளப்படுகிறது. இக்கூட்டத்திற்கு மாநிலதலைவர் சிவகுமார் தலைமை யேற்கிறார். மாவட்டத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்