: நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் 7 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள், தங்களது குடியிருப்புகளில் சிறிய அளவிலான கழிப்பறை கட்டவேண்டுமென்றால்கூட, கன்டோன்மென்ட் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், விதிமீறியும், முறையான அனுமதி பெறாமலும் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இந்நிலையில், விதிமீறிய கட்டிடங்களை இடிக்க கன்டோன்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டது. முதற்கட்டமாக 14 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 19 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதன்படி, நேற்று 16 கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது.
கன்டோன்மென்ட் நிர்வாகம் தரப்பில் நான்கு குழுக்கள் அமைத்து, காவல்துறையினர் உதவியுடன் விதிமீறிய கட்டிடங்களை இடிக்கும் பணியில் 50-க்கும்மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago