திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் நகரப் பகுதிகளில் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் :

திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் நகரப் பகுதிக்கு உட்பட்டவார்டுகளில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் மற்றும் குப்பை அகற்றம்உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மனு அளித்து பெருந்திரள் முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலஅலுவலகம் முன்பு நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு வேலம்பாளையம் நகரக் குழு உறுப்பினர் த.நாகராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் உள்ளிட்டோர் பேசும்போது, "திருப்பூர் மாநகராட்சி 11, 12, 13,14 மற்றும் 24, 25 ஆகிய வார்டு பகுதிகளில்சாக்கடை கழிவு நீரை வெளியேற்றி, குப்பையை அகற்ற வேண்டும். கொசு மருந்து தெளித்துசு காதாரம் பேணுவதுடன், வீட்டுக்குழாய் மற்றும் பொதுக் குழாயில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளில் சாலைகளை செப்பனிடுவதுடன், வீட்டுமனை வரன்முறை மற்றும் கட்டிட அனுமதி உரிமக் கட்டணத்தைப் பல மடங்கு அதிகரித்திருப்பதை குறைக்க வேண்டும்" என்றனர்.இதைத்தொடர்ந்து பொதுமக்களுடன்சேர்ந்து மண்டல அலுவலக உதவி ஆணையர் சுப்பிரமணியத்தை சந்தித்து மனுக்களை அளித்தனர். குடிநீர், சாக்கடை பிரச்சினைகளுக்கு உடனடியாகநடவடிக்கை எடுப்பதுடன்,சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படும் என்று, உதவி ஆணையர் சுப்பிரமணியம் தெரிவித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE