கோவை மாநகராட்சியை கண்டித்து - அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

திமுக அரசையும், கோவை மாநகராட்சியையும் கண்டித்து அதிமுக சார்பில் கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி கூறும்போது, “பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல்பரிசுத் தொகைஅளிக்க வேண்டும். தூய்மைப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோவை மாவட்ட மக்களின் அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ஒதுக்கிய 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத்தைரத்துசெய்த திமுக அரசையும்,கோவை மாநகராட்சியையும் கண்டித்து கோவை மாவட்ட அதிமுக சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு இன்று (டிச.17) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.

எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சிவி.ஜெயராமன், பிஆர்ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்