டிச. 21-ல் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம் :

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையின் விவரம்: ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் வங்கிக் கடன் பெற 18 வயதுக்கு மேல் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் 14 வயதுக்கு மேல் இருக்கும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம். கடன் தொகை ரூ.25 ஆயிரம் வரை பெறுவதற்கு ஒரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். ரூ.50 ஆயிரம் வரை கடன் உதவி வேண்டுவோருக்கு அரசுப் பணியில் உள்ள 2 பேரின் ஜாமீன் வேண்டும்.

ஜாமீன்தாரர்கள் அரசு, பொதுத் துறை, வங்கிகளில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று, ஜாதிச் சான்று மற்றும் வங்கி கடன் தொகையின் அடிப்படையில் வங்கி கோரும் இதர ஆவணங்கள் இருக்க வேண்டும். மேற்காணும் தகுதிகள் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்